பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் வெளிநாடு செல்ல தடை வதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சுனில் வட்டகல உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று சட்டமா அதிபரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. ஏப்ரல் 26 ஆம் திகதி சட்டமா அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள மேற்படி முன்னாள் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த மூவர் மீதும் தற்போது ஊழல் வழக்குகள் விசாரணையில் இருப்பதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.