பளை பேரூந்து விபத்தில் முல்லைத்தீவு வலய அரச உத்தியோகத்தர் பரிதாபமாக மரணம்..
நேற்று மாலை பளை முள்ளியடி பகுதியில் அரச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டு விபத்துக்குள்ளாகியது.
இதில் ஒருவர் உயிரிழந்ததோடு 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை வலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் 32 அகவையுடைய ஜீவானந்தம் சுகிர்தினி என்ற அரச உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அரசடி சாவகச்சேரியினை சேர்ந்த குறித்த அரச உத்தியோகத்தர் பணி முடித்து திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் குறித்த பேருந்தில் பயணம் மேற்கொண்ட நிலையில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
பளை பேரூந்து விபத்தில் முல்லைத்தீவு வலய அரச உத்தியோகத்தர் பரிதாபமாக மரணம் karihaalan News
No Comments1 Min Read