இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்க நகர்வுகள் தொடர்பில் முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளவை,
ரணில் ஒரு திறமையான செஸ் பிளேயர். சிங்களத்தில் அவரை சூத்தர புஞ்சா என நக்கலாக அழைப்பார்கள். அதாவது கணித்து தட்டுபவர் என்பதாகும். அவர் தற்போது பல நாள் கனவுகளை நனவாக்கிக் கொண்டு வருகிறார்.
ரணில் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும் எந்தவொரு பிரேரணையையும் எதிர்க்கட்சிகளால் கூட எதிர்க்க முடியாது உள்ளது. எதிர்த்தால் மக்கள் எதிரணியை எதிர்ப்பார்கள் அப்படியென நகர்வுகளை ரணில் மேற்கொண்டு வருகின்றனர்.
இன பிரச்சனையிலும் தமிழ் தரப்பு மாட்டிக் கொண்டுள்ளது. இதை எதிர்த்தால் சர்வதேசமே தமிழருக்காக பேச வராது. காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டால் நல்லது.
சில தமிழர்கள் சிங்களவர் கருத்தை கேட்டுத்தான் தமிழருக்கு தீர்வை தர வேண்டும் என சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது போல இந்த ஜென்மத்துக்கும் நடக்காது. அது இன்னொரு சாராரின் அஜண்டாவில் வேலை செய்பவர்கள். அதை பலர் உணரவே இல்லை.
இலங்கையின் மாற்றங்கள் எதுவும் தவளைகள் சொல்லி நடந்தவை அல்ல. தலைகள் நினைத்து செய்தவை. மறக்க வேண்டாம். என குறித்த நபர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.