பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 17,000 சந்தேக நபர்கள் கடந்த ஆண்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் சமூக சீர்திருத்தத்திற்கு அனுப்பப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இந்த நபர்கள் சிறைச்சாலைகளுக்கு வெளியே கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டதாகவும், சிறைச்சாலைகளில் நெரிசலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சமூக சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சமகி ஜன பலவேகயவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

