இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட மங்குஸ்தான் பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து (Fiber) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க உதவுகிறது மங்குஸ்தான் பழம்.
அதன் நன்மைகளை அறிந்து கொள்வோம்,
மங்குஸ்தான் பழம். புற்றுநோய், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு மிகவும் பயனளிக்கும். மங்குஸ்தான் பழமானது மூளை வீக்கத்தைக் குறைக்கிறது, தசைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
எனவே, மங்குஸ்தானை சாப்பிடுவதால் மூளைக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். மனச்சோர்வை குறைக்கவும் மங்குஸ்தான் கிங்காக செயல்படும். சருமப் பிரச்சனைகளை தீர்க்க மங்குஸ்தான் பழத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். பயன்பாடு நன்மை பயக்கும்.
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. கணிசமான அளவு நார்ச்சத்து கொண்ட மங்குஸ்தான், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
அத்துடன் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உடலின் திறனை மேம்படுத்துகிறது. ஒரு ஆய்வின்படி, மங்குஸ்தான் பழத்தில் இருக்கும் ரசாயன கலவை ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளால் நிறைந்துள்ள மங்குஸ்தான் பழம் நோயெதிர்ப்பு உயிரணுக்களை வலுப்படுத்த வேலை செய்கிறது. கணிசமான அளவு வைட்டமின்-சி இருக்கும் மங்குஸ்தன் பழத்தை உண்டால் ஆரோக்கியமான நோயெதிர்ப்பைப் பெறலாம்.
மங்குஸ்தான் பழம் பலவிதங்களில் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஜூஸாகவும் கிடைக்கும் மங்குஸ்தானை அப்படியே பழமாக சாப்பிட்டால் நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.