களுத்துறை நகரின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒருவரை வாளால் வெட்டிய நபரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (13) பிற்பகல் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டவர் நகர மையத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரது கைகளிலும் முதுகிலும் மூன்று காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தத் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் காயமடைந்தவர் அங்கிருந்த மாவட்ட செயலாளர் அலுவலகம் நோக்கி ஓடும் போது வீதியில் கீழே வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும், அவர் தனியார் பஸ் நடத்துனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.