மன்னாரில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிற்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மன்னார், உயிலங்குளம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பிரதான வீதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின் பின்னர் இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அந் நபர் அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக அந் நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர் அடம்பன் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகிறது .
அந் நபர் விபத்திற்கு உள்ளானாரா? அல்லது தாக்குதல் சம்பவமா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.