பறங்கியர் என கார்டினல் என்னையே விமர்சிக்கிறார். ஆனால் நான் பறங்கியர் அல்ல என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே , தான தெற்கில் உள்ள பௌத்த சிங்கள குடும்பத்தில் பிறந்த பெண் எனவும் தெரிவித்துள்ளார்.
பறங்கியர் என தன்னை விமர்சிக்கும் கார்டினல் போதிக்கும் மதத்தைப் பறங்கியர்களே இலங்கைக்கு கொண்டுவந்தார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதோடு , கார்டினல் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
சூதாட்ட விடுதிகள், கஞ்சா சூதாட்ட விடுதிகள்
கஞ்சா தொடர்பில் நானே பேசி வருகிறேன். இவ்வாறான நிலையில் பறங்கியர் கூறுவதைக் கேட்டு செயற்பட முடியாதென கார்டினல் கூறியிருக்கிறார். கார்டினல் என்னைப் பற்றியே பேசியிருக்கிறார்.
போர்த்துக்கேயரையே பறங்கியர்கள் என நாட்டில் விழிக்கிறார்கள். கார்டினல் போதிக்கும் கத்தோலிக்க மதத்தை பறங்கியரே இலங்கைக்குக் கொண்டுவந்ததாகவும் டயானா சாடினார்.
அப்படியென்றால் பறங்கியர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டுமே. இவ்வாறான நிலையில் பறங்கியர் தொடர்பில் கார்டினல் எவ்வாறு விமர்சிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.