கடுகதி பஸ்கள் மற்றும் புகையிரதங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அதிக செலவுகள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து சேவைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, “அதிக செலவுகளாலும், பல்வேறு மோசடிகளாலும், ஊழல்களாலும் ரயில்வேயும்,போக்குவரத்து சபையும் நீண்டகால நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
மோசடி மற்றும் ஊழலை ஒழிக்க ரயில்வேயை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.மேலும் கார்ட் முறையில் பஸ் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் .அதற்காக அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படும்”. என்று தெரிவித்துள்ளார்.