இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மாமியின் மகனான 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைய சகோதரிக்கு 4 வயது இருக்கும் போதும் மூத்த சகோதரிக்கு 9 வயது இருக்கும் போதும் குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில், அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில், இளைய மகளை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது தனது சகோதரியுடன் இணைந்து பண்டாரவளை பொலிஸில் சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பிரதேசத்தில் மேலும் பல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.