பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு பதில் வழங்க தாம் தயாராக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று நாடாளுமன்றத்தில் தெரவித்துள்ளார்.
இது குறித்து பொது மக்கள் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கருத்துத் தெரிவக்கையில் ” நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிராக 14 நாட்களுக்குள் மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நட்டஈடு கோருவேன்.
மானநஷ்ட வழக்கு என்பது ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. வழக்குத் தாக்கல் செய்தால் நாமல் ராஜபக்ஷவிடம் சட்டக்கல்லூரி, தாஜுதீன், லசந்த,ஹெக்னெலிகொட, ஜூலம்பிட்டியே அமரே உள்ளிட்ட பல விடயங்களை குறுக்கு கேள்வியாக கேட்பேன்
ஆனாலும் எனக்கு உத்தியோகபூர்வமாக எவ்வித பத்திரமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
நாமல் நீதிமன்றத்தில் பயிற்சிப் பெறாத காரணத்தால் மானநஷ்ட வழக்கின் தன்மையை அவர் அறிந்திருக்கவில்லை. மானநஷ்ட வழக்கின் போது முறைப்பாட்டாளரிடம் பிரதிவாதி எந்த கேள்விகளையும், கேட்கலாம். ஏனைய வழக்குகள் இவ்வாறான தன்மை கிடையாது.
குறிப்பாக முறைப்பாட்டாளர்கள் கண்ணாடி அறையில் இருக்க கூடாது.
கண்ணாடி அறையில் இருக்கும் நபர் என்னிடம் பில்லியன் கணக்கான நிதி கோடி கேள்வி கோரல் பத்திரத்தை அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த வழக்கில் ஒழுக்கம் பிரதான ஒரு அம்சமாக கருதப்படும். அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்பவரின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும்.

