பண மோசடியால் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுத் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
தெபுவன பெங்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரே கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .
கொலை செய்யப்பட்டவர் , இருவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் பணத்தை வழங்கிய இருவருமே இந்த கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.