உமா ஓயா ஜெனரேட்டர்களுக்கு பெண்களின் பெயர்கள் சூட்டப்பச்சுள்ளன.
உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் நிர்மாணிக்கப்படும் போது பணிபுரிந்த இரண்டு பணிப்பெண்களின் பணியை பாராட்டி, அவற்றுக்கு ‘தசுனி’ மற்றும் ‘சுலோச்சனா’ என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பானங்களை சுமார் 300 மீட்டர் ஆழத்தில் இருந்து தயாரித்தல் உள்ளிட்ட பிற பணிகளை செய்த இவர்களின் சேவையினை பாராட்டும் வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்படுள்ளது.
அதன்படி , தலா 60 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு மின்உற்பத்தி இயந்திரங்களுக்கும் தொழிலாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டதாக உமாஓயா மின் உற்பத்தி நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.