பேலியகொட மெனிங் சந்தை பகுதியில் கடைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து வர்த்தகர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முன்னாள் அமைச்சர் வர்த்தகரொருவருக்கு 10 கடைகளை தருவதாக கூறி அவரிடமிருந்தே பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் வர்த்தகர்களுக்கு கடைகளை வழங்கத் தவறியதன் காரணமாக, அவர்கள் தற்போதைய பொறுப்பான இராஜாங்க அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்து, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.