அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வழங்கிய சான்றிதழை வாங்காமல் , பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த சிங்கப் பெண் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பின் போது, வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வழங்கிய சான்றிதழை வாங்காமல் , உபவேந்தருடன் புகைப்படம் எடுத்த பெண்ணின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் குறித்த பெண் தொடர்பிலான தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணின் பெயர் காயத்திரி நவரத்ன என்றும், 2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைத்துறையில் நாடளாவிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.
அதோடு காயத்திரி நவரத்ன தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் காயத்திரி நவரத்ன பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மஹில் பண்டாரவின் தோழி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காயத்திரி நவரத்ன, மஹீல் பண்டார அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஸ்தாபிக்கப்பட்ட ‘உண்மையான தேசப்பற்றுள்ள’ இளைஞர் குழுவின் தீவிர உறுப்பினர் எனவும் கூறப்படுகின்றது.