அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (01) காலை டுபாயில் இருந்து ஈ.கே 650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவை வரவேற்க இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தார்.