பங்களாதேஷில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த 543 நாள்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.
அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளதைத் தொடா்ந்து, கட்டுப்பாடுகளைத் தளா்த்த அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் அலட்சியம் செய்யப்பட்டு, நோய்த்தொற்று தீவிரமடைந்தால் அவை மீண்டும் மூடப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது