பங்களாதேஷின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தை பாரிய அளவில் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாரெக் இஸ்லாமுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.