புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த தலுவ, நிர்மலாபுரா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த வயிற்றுப்போக்கு, வாந்திபேதி மற்றும் காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தலுவ, நிர்மலாபுர, கஜுவத்த, மின்னியா உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த நிலை வேகமாகப் பரவி வருவதாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புத்தளம் ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் பிரதேசத்தில் ஈக்கள் பெருமளவில் பெருகியிருப்பதாகவும் தங்கள் வீடுகளுக்குள் ஈக்கள் மொய்ப்பது தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வாந்திபேதி வயிற்றோட்டம் காய்ச்சல்
அதோடு , சமைத்த உணவை சமைத்து உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை வாந்திபேதி வயிற்றோட்டம் காய்ச்சல் போன்ற நோய்கள் பெருகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கல்பிட்டி தளுவ உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயிர்களுக்கு இரசாயன உரங்கள் இல்லாத நிலையில் கோழிப்பண்ணைகளில் இருந்து அகற்றப்பட்ட கலப்பு கோழி உரவகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதன் காரணமாக இந்த ஈக்கள் பெருகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரிஷாந்த பாலசூரிய தெரிவிக்கையில் கடந்த ஆண்டுகளில் இந்த நிலை இருந்ததா என்பது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்