நுகேகொடை – மஹரகம வீதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியின் தற்போதைய நிலை தொடர்பிலும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதேவேளை, நேற்றிரவு நடந்த மோதல்கள் தீவிரவாதக் குழுவின் விளைவாகும் என்றும் பொலிஸ் துறை கூறுகிறது.
மேலும் இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் இரவு 11 மணிக்கு ஊடகங்களைச் சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.