குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 34 வயதுடைய உயிரியல் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03-05-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த ஆசிரியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாரியப்பொல பாடசாலையொன்றில் கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியரே விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.