இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றதாக கூறப்படுகின்றது.
ஹோட்டல்களில் மின்வெட்டு ஏற்பட்டால் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பயணங் களுக்கு எரிபொருளை வழங்க முடியாமல் உள்ள நிலையில்ல், யால மற்றும் ஏனைய பூங்காக்களும் வேகம் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், ஹோட்டல்களில் உணவு தயாரித்த லுக்கும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இது சுற்றுலாத் துறைக்கு பலத்த அடி எனவும் அவர்கள் கூறுகின்றனர்.