நெடுந்தீவு பகுதியில் நேற்றையதினம்(22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு வயோதிபப் பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் 50வயதுடைய நபர் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பொலிஸார் 48 மணித்தியாலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரிய நிலையில் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணிநேர விசாரணையின் பின் மன்றில் மீண்டும் சந்தேகநபரை முற்படுத்துமாறு பொலிஸாருக்கு பணித்தது.
இவ்வாறானதொரு நிலையில் நேற்றைய தினம்(22) படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணியம்மா பூமணி ஆகியோரது சடலங்கள் இன்றைய தினம்(23) அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.