நெடுஞ்சாலை ஊழியர்கள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் இன்று பயணச்சீட்டு வழங்கும் மற்றும் பணம் வசூலிக்கும் பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் நடவடிக்கைகளை பராமரித்து வருவதாக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்காக பாரிய அளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பொதுப் போக்குவரத்தில் மக்களை ஒடுக்கி வேலை செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.