சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (ஓகஸ்ட் 02) மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே நேற்று தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணம் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்தது.
வானிலை அறிவிப்பு மையம், தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருவதால், அடுத்த சில நாட்களுக்கு மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என திணைக்களம் நேற்று எச்சரித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.