பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி 3 ஆவது நாளாகவும் இன்று (20) இடம்பெற்று தேடும் பணி நண்பகலுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பிகள் மூவருடன் டெவோன் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு செல்வதாக கடந்த 18 ஆம் திகதி வீட்டில் இருந்து சென்ற லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட லென்தோமஸ் தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய மணி பவித்ரா என்ற யுவதி டெவோன் ஆற்றில் நீரில் அடித்துச் சென்று காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன யுவதியை பொலிஸாரும், இராணுவத்தினரும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து மூன்றாவது நாளாகவும் தேடிய போதிலும் இதுவரையில் கண்டு பிடிக்கவில்லை எனவும் நண்பகலுடன் தேடுதல் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.