கொழும்பின் சில பகுதிகளில் இன்று (22) அமுல்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர்விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
முன்னதாக, அத்தியாவசிய திருத்தப் பணிகள் நிமித்தம் இன்றிரவு 10 மணி முதல், நாளை (23) மதியம் 12 மணிவரை கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு 02 தொடக்கம் கொழும்பு 10 வரை சுமார் 14 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படவிருந்த நீர்விநியோகத் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பின் 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.