நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை நீர்கொழும்பு மாநகர சபை பல நாட்களாக அகற்றாத நிலையில் வைத்தியசாலையில் கழிவுகள் நிரம்பியுள்ளன.
இதனால் அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட அயலில் வசிப்போர் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட சிலப்பகுதிகளில் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

