பேருவளை மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 11.40 மணியளவில் இது இடம்பெற்றுள்ளதுடன், அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு பேருவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மற்ற இருவரும் காப்பாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவத்தில் 17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று இளைஞர்களே நீரில் மூழ்கியுள்ளனர்.