வழக்கு விசாரணையொன்றுக்காக நீதிமன்றத்துக்குச் சென்ற பெண்ணொருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணொருவர் மீதே குறித்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாக்குதல் மேற்கொண்ட நபர் அப்பெண்ணின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி , தப்பிச் சென்ற நபரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.