நிலக்கரி ஏற்றிய 16ஆவது கப்பல் நாளை (05) இலங்கை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளைப் பெற்றுள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.