கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளரின் முகத்தில் மிளகாய்தூள் வீசப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிப்பதற்கு இப்பலோகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உதவி முகாமையாளர் பல்வேறு நபர்களுக்கு கடன் வழங்கியிருந்ததுடன், கடன் தொகையின் தவணை முறையில் பெற்றுக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.