சிலாபத்தில் உள்ள பிரதான குத்தகை நிறுவனம் ஒன்றில் பெட்டகத்தை உடைத்த கொள்ளையர்கள், அதிலிருந்து சுமார் 71 இலட்சம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குத்தகைக் நிறுவனத்தின் சுவர்களை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், பல மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து இயந்திர கிரைண்டரைப் பயன்படுத்தி இரு பெட்டகங்களை வெட்டி அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை குந்தகை நிறுவன ஊழியர்கள், கடமைக்காக வந்தபோது, தமது நிறுவனத்தின் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பணம் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததை அவதானித்ததுடன், இதுபற்றி பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.