தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி எவ்டபில்யூ டி கிளார்க் (Frederik Willem de Klerk) தனது 85 வயதில் காலமானார்.
ஜனநாயகத்தை நோக்கிய தென்னாபிரிக்காவின் மாற்றத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய டி கிளார் (Frederik Willem de Klerk) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். டிகிளார்க் (Frederik Willem de Klerk) 1989 செப்டம்பர் முதல் 2004 மே மாதம் வரையில் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
1990இல் அவர் நெல்சன்மண்டேலாவை விடுதலை செய்வதாக அறிவித்த நிலையில் அது 1994 தேர்தலிற்கு வழிவகுத்தது. 1989இல் பிடபில்யூபோத்தாவிடமிருந்து தேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற கிளார்க் (Frederik Willem de Klerk) அடுத்தவருடம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உட்பட பல கட்சிகளின் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தார்.
இதேவேளை அவரது நடவடிக்கைகள் தென்னாபிரிக்காவில் நிறவெறி யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவின.
1994 இல் நெல்சன் மண்டேலா (Nelson Mandela) ஜனாதிபதியான தேர்தலில் இவர் தென்னாபிரிக்காவின் இரு பிரதி ஜனாதிபதிகளில் ஒருவராக பதவிவகித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது