அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 6 வாகனங்களை சீர் செய்ய நிதிப் பற்றாக்குறை காரணமாக அவற்றை ஏலம் விடுவதற்கு கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி Land Cruiser V8, Land Rover, Micro, Tata வாகனங்கள் 2020 முதல் அமைச்சக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருத்துவதற்கு அதிக செலவு
இது தொடர்பில் கைத்தொழில் அமைச்சின் பிரதம கைத்தொழில் சேவை அதிகாரி கிஹான் சுமனசேகரவிடம் கூறுகையில்,
இந்த வாகனங்கள் 2013 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், இந்த வாகனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சீர்செய்வதற்கு அதிக பணம் செலவிடுவதாகவும் தெரிவித்தார்.
எனவே அந்த வாகனங்களை கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருத்தினால் ஏனைய வாகனங்கள் திருத்துவதற்கு பணமில்லாமல் போகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக டெண்டர் நடைமுறையை பின்பற்றி அந்த வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.