நிட்டம்புவ, உடமிட்ட பகுதியில் ஒரு வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சோதனைக்காக நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியதால் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளது.
நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.