நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுதுள்ளன.
இந்த போராட்டத்திற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன அதோடு துறைமுகம், தொடருந்து, சில சுகாதார சேவை சங்கங்கள், சுங்கத்தினர், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் நிட்டம்புவவில் மக்கள் வீதிகளில் ரயர்களை கொழுத்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் வீதிக்கு இறங்கி போராடங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.