பொசன் போயாவை முன்னிட்டு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை சில விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த விசேட ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கால அட்டவணைக்கு அமைய முதல் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து மதியம் 12.40 மணிக்கு தனது பயணத்தை அனுராதபுரம் நோக்கி ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வரும் ஜூன் 14ஆம் திகதி பொசன் போயா தினம் என்பது குறிப்பிடத்தக்கது