பிடபெத்தர நில்வள கங்கையின் உடஹா நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
குறித்த இடத்தில் நேற்று (26) பிற்பகல் நீராடச் சென்ற 12 பேரில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரஸ்ஸ, பொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக மிதிகம பிரதேசத்திலுள்ள அமைப்பொன்றில் பணியாற்றிய குழுவினர் மது அருந்திவிட்டு நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.