ஹொரனை பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
17 வயதுடைய பாடசாலை மாணாவனே இவ் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நான் வாழ்ந்து பலன் இல்லை, நான் சாக போகிறேன்” என தனது காதலியிடம் தொலைபேசியால் தொடர்பு கொண்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுவிட்ட வடக்கில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்து ஹோட்டல் கற்கைநெறியை பயின்று வந்த தினேத் தஷ்மிகா தேவ் ஷி விக்கிரமசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது தாயாரின் தோழியின் வீட்டில் தங்கியிருந்து சுமார் ஒன்றரை மாதங்கள் புலத்சிங்கல பிரதேசத்திற்கு சென்று கற்கை நெறிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி வழமை போன்று பாடநெறிக்காக சென்று தனது வீட்டுக்குச் திரும்பிய இளைஞன் அன்று இரவு உறங்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் அவ் இளைஞனை எழுப்ப வீட்டின் உரிமையாளரின் சகோதரி அறைக்குச் சென்றதாகவும் இளைஞனின் சடலம் கட்டிலில் தொங்குவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.