இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பதில் தொழிநுட்ப அமைச்சராகவும், இராஜாங்க சமூக வலுவூட்டல் அமைச்சர் அனுபா பெஸ்குவால் பதில் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் செயற்படவுள்ளனர்.