ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி ஒப்டஸ் சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அஷேன் பண்டாரவிற்கு பதிலாக பெத்தும் நிஸ்ஸங்க இன்று விளையாடவுள்ளார்.
கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட எடம் செம்பாவிற்கு பதிலாக எஷ்டன் எகாரை அழைக்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.