அரசாங்கத்தின் அதிக வரியின் காரணமாக தொழிநுட்பத்துறையில் பணிபுரிவோர் நாட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளத்தகா தகவல் வெளியாகி உள்ளது.
இதனை இலங்கை கணனி தொழிற்நுட்ப சபையின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.
ஹெட்டிஹேவாவின் கருத்து
தகவல் தொழிநுட்பத்துறையில் பணம் சம்பாதிக்கும் பலர் இருந்து வரும் நிலையில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தில் தமது பணத்தை முதலீடு செய்ய அவர்கள் விரும்பவில்லை.
அத்தோடு தகவல் தொழிநுட்பத்துறையின் ஊடாக ஐந்து பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும். அதற்கு அரசாங்கத்தின் உதவிகள் அவசியம் எனவும் ஹெட்டிஹேவா கூறியுள்ளார்.
அதேவேளை தம்மிடம் அறவிடப்படும் வரி வருமானத்தை நாட்டின் கல்வி மற்றும் புதிய உற்பத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு தகவல் தொழிநுட்பத்துறையில் இருப்போர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.