வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக குறித்த பணியகம் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும், அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கு மேல் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.