முட்டைகளை மறைத்து வைக்கும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், முட்டை தட்டுப்பாடு இருப்பதாக சிலர் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி நுகர்வோர் அதிகாரசபையினர் சோதனை நடத்தியதுடன், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகள் பலர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது