இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை எரிவாயுவை விடுவிக்கத் தேவையான டொலர் தொகை இன்று கிடைக்காவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை வெளியிடத் தேவையான 1.2 மில்லியன் டொலரை இலங்கை மத்திய வங்கி இன்னும் விடுவிக்கவில்லை என்றும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை எரிவாயுவை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் எரிவாயு நிறுவனத்திடம் தற்போது சுமார் 2,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே மீதம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.