நாட்டின் பல பாகங்களிலும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிரதேசங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.