நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தெவலபொல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 மற்றும் 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் மல்வத்துஹிரிபிட்டிய, யக்கலை, தோம்பே மற்றும் படல்கம ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு தங்க மாலை, 05 தங்க தோடுகள், 03 பென்டன்கள், 02 கையடக்கத் தொலைபேசிகள், 03 கைக்கடிகாரங்கள், 05 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் தண்ணீர் மோட்டார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்