நாட்டில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 2023 ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகுதிகளுக்கு ஜனவரி 2 ஆம் திகதி, 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது