நாட்டில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன.
12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் ரூ.16,000 வரையும் 5 கிலோ சிலிண்டர் ரூ.9,900க்கும் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் புதிய சிலிண்டர்களை எரிவாயு நிறுவனங்கள் விற்பனை செய்யாததால் அதிக விலைக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.